Wednesday, January 23, 2019

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

           



மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 




அன்று பாடிய கவிஞர்களின் கவிகள்

(1)

                                 

Tuesday, January 15, 2019

நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே (கவியரங்கம்)

                                                                         
                                             (1)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicEB7T3yLty1reo3Cz-ss0gmLTPHmH6PbSpjyMMpXzqgBSBEh4hikLiJDfmK5MaKcFK-Do4Vh-cv6UiTIHRZmhHvLNlldD-xM3tKoChBIRUOOogaCO1_YrEs-co2Tt5UJHCUMo_gujNdY/s1600/3.+Thennavan.png   
.X.............................................................................&&&...................................................................X.
(2)

கவிஞர் இரா. இரவி.
நெகிழி மண்ணை மலடாக்கிக் கெடுக்கும்
கிரந்த எழுத்து தமிழின் சீரைக் குலைக்கும்!
நெகிழி உண்டு விலங்குகள் மடிந்துவிடும்
கிரந்த எழுத்தால் நல்தமிழ் நலிந்து விடும்!
உண்ணும் உணவில் நஞ்சு கலக்கலாமா?
உன்னதத் தமிழில் கிரந்தம் கலக்கலாமா?
நெகிழியில் சூடானவை கலக்க புற்றுநோய் வரும்
நம்தமிழில் கிரந்தம் கலக்க கேடு வரும்!
நெகிழி வேண்டாம் மஞ்சப்பை வேண்டும்
கிரந்தம் வேண்டாம் காந்தத்தமிழ் போதும்!
நெகிழிக் குப்பை மண்ணில் மக்காது
கிரந்தம் கலந்து பேசினால் மக்காவாய்!
நெகிழி அழித்தது நிம்மதியான வாழ்வை
கிரந்தம் அழித்தது தூயதமிழ்ப் பேச்சை!
திட்டமிட்டால் ஒழித்து விடலாம் நெகிழியை
திட்டமிட்டால் ஒழித்து விடலாம் கிரந்தத்தை!
வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு நெகிழி
வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு கிரந்தம்!
ஒழிப்போம் ஒழிப்போம் நெகிழியை ஒழிப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம் கிரந்த எழுத்தை ஒழிப்போம்!
நெகிழியின் பயன்பாட்டால்  நெழிந்தது சமுதாயம்
கிரந்தெழுத்து பயன்பாட்டால் தமிழுக்கும் சிறுமை!
உடலுக்கு புற்றுநோய் தரும் நெகிழி நீக்கு
உலகின் முதல்மொழியில் கலப்படம் தீங்கு!
விழிப்புணர்வு வேண்டும்! நெகிழி வேண்டாம்!!
விழிப்புணர்வு வேண்டும்! கிரந்தம் வேண்டாம்!!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

  http://tamil.pratilipi.com/kavignar-eraravi
X...............................................X..................................................X
                                                  (3) நெகிழிகளால் நிலம்கெடுமே  கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே 
எங்கும் துணிஎதிலும் துணி மாறி
எங்கும் நெகிழிஎதிலும் நெகிழிஆனது
எங்கும்தமிழ்எதிலும்தமிழ் மாறி
எங்கேதமிழ்எதிலேதமிழ்ஆனது.
மனிதஇனத்தைஅழிக்குமே நெகிழிஅவதாரம்
மக்கும்இனம் காக்குமேமனித வாழ்வாதாரம்
தமிழ்மொழியைஅழிக்குமே கிரந்தெழுத்துகள்
தமிழ்இனத்தைக் காக்குமேதனித்தமிழ் எழுத்துகள்
அபாயமணி நெகிழிக்குமட்டுமல்லாது
அந்நியமொழிகலந்ததமிழுக்கும் கூடவே
நெகிழிஅழிக்கச்சட்டம்இயற்றும்அரசு
நச்சுகலப்பைத்தடுத்தால்தமிழுக்குப்பரிசு.
புதைத்தால்மடலாகும் பூமி
எரித்தால்நஞ்சாகும் காற்று
கலந்தால் மாசாகும்கடல்
உண்டால் பிணியாகும்உடல்.
சிங்கநடைப் போட்டத்தனித்தமிழ்
அசிங்கமானது கிரந்தஎழுத்துகளாலே
வெகுளித்தமிழர்களால்வந்த வினை

வெட்கிக் குனியும்தமிழின் நிலை.
                                கு.கி.கங்காதரன்
                         

X==================================X===============================X
                                       (4)
 <<<நெகிழிகளால் நிலம்கெடுமே  கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே>>>

நெகிழிக் காகிதங்கள் நிறையவே பயன்படுத்தி
அகிலத்திற் குணவளிக்கும் அருமைமிகு நிலங்களின்று
துகிலுரித்த உடலாகி தூய்மையெல்லாம் பறந்ததினால்
மகிழத்தான் முடியலையே மாற்றுவழி என்னமச்சான்?

சரியாகச் சொல்லிவிட்டாய் சற்றுகொஞ்சம் சிந்தித்தால்
அறியாமல் செய்துவந்த அச்செயலை மாற்றிடவும்
புரியாமல் செய்துவந்த புத்தியினை தீட்டிடவும்
தெரியாமல் செய்தவற்றை திருத்தவழி உண்டுபுள்ளே!

இந்தக் கொடுமைகூட எளிதாக மறந்திடலாம்
நந்தம் தமிழோடு நஞ்செனவே கிரந்தெழுத்தை
சொந்தம் கொண்டாடி சூசகமாய் நம்தமிழில்
வந்தேறி மொழிக்கலப்பை வதைக்கவழி என்னமச்சான்?

சஞ்சலம் தவிர்த்துவிடு சட்டென்றோர் வழிசொல்வேன்
அஞ்சாமல் நற்றமிழை அருமைமிகு தனித்தமிழை
நெஞ்சாரப் போற்றாமல் நீசமொழி கலந்துவக்கும்
வஞ்சகர் நாக்கறுக்க வழியொன்று உண்டுபுள்ளே!

கொஞ்சுமொழி பேசுகிற குழந்தைக்கும் இதைச்சொல்லி
வஞ்சனைகள் செய்கின்ற வாய்ச்சொல்லின் வீரர்களை
கெஞ்சினாலும் மிஞ்சினாலும் கிட்டவந்து துஞ்சினாலும்
அஞ்சாமல் வெஞ்சிறையில் அடைத்துநம் தமிழ்காப்போம்!

காப்போம் காப்போம் கழனிகள் காப்போம்
சேர்ப்போம் சேர்ப்போம் செழிப்பினை தமிழில்
மீட்போம் மீட்போம் மிடுக்குடன் தமிழை
ஓய்ப்போம் ஓய்ப்போம் கிரந்தெழுத் தினையே!
               பேரா. முனைவர் இரா. வரதராசன், மதுரை 
                           அ.பே:7010717550  
       veerajan@yahoo.com                             
                     [30.12.2918]
x======================================O===================================x
                          (5)
<<<நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே>>>-

பூவுல கெங்கும் பரவித்தான்

   புதைந்தே வாழும் நெகிழியேநீ

பூத்துக் குலுங்கும் பூமித்தாயை

   புழுங்கி அழவும் செய்வதுஏன்?

பொன்னே விளையும் பூமியின்மேல்

    பொறாமை என்ன சொல்லிடுவாய்

மண்ணின் மைந்தன் கேட்கின்றேன்

    மனம்மிக நோவது அறிவாயா?



உனக்கொரு மாற்று தேடுகிறேன்

    உள்ளதைச் சொன்னேன் கேட்டிடுவாய்

தனக்கென எதையும் மறைக்காமல்

    தானம் செய்யும் பூமித்தாயை

கணக்காய் இங்கே காத்திடவே

    கனவில்கூட நீவேண்டாம் சென்றுவிடு

பிணக்கம் வேண்டாம் பொறுக்காது

    பின்வரும் விளைவும் புரியாது!  



நெகிழிப் பைகளின் கொடுமைகூட

    நின்றே கொஞ்சம் மறந்திடலாம்

அழகுத் தமிழில் கிரந்தெழுத்து

    அளவில் லாமல் கலந்திடுதே

உலகில் வாழும் மொழிகளிலே

     உன்னத மொழிநம் தமிழேதான்

பழகிப் பார்த்தால் புரிந்திடுமே

     பாரில் நிலைப்பது நம்தமிழே! 
           கவிஞர் சூசையம்மாள், மதுரை &==================================&=====================================&
                                   (6)
<<<நெகிழிகளால் நிலம் கெடுமே! கிரந்த எழுத்தால் தமிழ் கெடுமே!>>>

தன்னொளி பெற்றுத் திகழ்கின்ற இரத்தினமாய்
தமிழ் என்றும் சுடர்வீசித் திகழுவதாய்
கண்ணோளி பட்டுத் தெரியும் காட்சியெல்லாம்
எண்ணக் கதவின் மொழிவழி வளர்ச்சியால்தான்!

என்ன இல்லை தமிழ்மொழியில் எடுத்தியம்ப
எதனாலே மதியிழந்து கலங்க வேண்டும் கூறு!
எண்ணும் எழுத்தும் தமிழின் உயர்வன்றோ!
இயம்ப இயம்ப இனிக்கும் அமுதன்றோ!

புகழிடமே தேடிவந்த பிறமொழி எழுத்துக்கள்
பகலவனாய் ஒளிர் விடும் தமிழினுடே
இகழும் வகை இன்றிருப்போர் கெடுப்பதென
இச்சகத்தில் தமிழ்தான் எப்படித்தான் வளரும்!

நெகிழிகளால் நிறைந்த நிலம் கெடுவதென
கிரந்த எழுத்துக்களால் தமிழ் கெட்டுவிடும்
வெகுளித் தனமாய் வாழ்ந்து திரிந்தாலே
வாழ்வு வழித்தடம் தெரியாமல் போய்விடும்!

தமிழராய் பார்த்து திருந்தாவிட்டால் என்றும்
தமிழை வளர்க்க முடியாது! தொடர்பிலா
ஒண்டவந்த பிசாசை இல்லாமல் ஆக்காவிட்டால்
தரணியில் தமிழர் தலைநிமிர்ந்திருக்க முடியாதே!

தமிழால் தான் தமிழரின் மானம்வாழும்!
தமிழ் இன்றேல் தமிழர்தம் வாழ்வுவீழூம்!
அமிழ்தினும் அகிலத்தே சிறந்து விளங்கும்
அன்னைத்தமிழ் அரசாள முழக்கம் செய்வோம்!

துரை..பாண்டியன்1சிஇராக்கப்பக்கோனார் சந்து, கொத்தாலத்தெரு, அயன்பாப்பாக்குடி, அவனியாபுரம், மதுரை-625012.
/பே9245571522.

X================================O===============================X               <நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே> 

அறிவியலால் உருவான தொல்லை, பூமி
                அன்னையினைப் பாழாக்க வந்த பிள்ளை
பெருகிவரும் புற்றுநோய்க்கும் மற்ற நோய்க்கும்
                பெரும்பாலும் காரணமே நெகிழிதானம்
உருவினிலே மென்மையாகத் தோன்றினாலும்!
                உலகினிலே பலநூறு ஆண்டுகாலம்
ருந்திடுமாம் அழியாமல் மழையின் நீரை
              ப்பூமி உறிஞ்சாமல் தடுத்தே நிற்கும்

அதுபோல நம்தமிழில் கிரந்தெழுத்தை
                அன்பர்களே நாம் நுழைய அனுமதித்தால்
மெதுவாக நம்தமிழைக் கொன்றழித்து
                மேதினியில் வடமொழியை மேன்மையாக்கும்
பொதுவாகத் தமிழர்களே! பிறமொழியைப்
                பூந்தமிழில் கலந்தெழுதப் புகுத்த வேண்டாம்
மதுபோல மதிமயக்கி கிரந்தெழுத்து
                மடையர்களாய் நமை மாற்றும் மறக்கவேண்டாம்!

தாய் நமக்குத் தந்தமொழி தமிழைக் கற்போம்
                தரமிகுந்த நம்நாட்டுக் கலைகள் கற்போம்
பேய்போல வாழ்வதற்கு வ(ழி வகுக்கும்)லை விரிக்கும்
                பிற நாட்டு நாகரீகப் பித்தைவிட்டு
சேய்களுக்கு தாய்த்தமிழில் பெயர்கள் வைப்போம்
                செந்தமிழை வளர்ப்பதற்குச் சேர்ந்துழைப்போம்,
வாய்பிளந்து உண்பதுவும் பாய்விரித்தே
                வானரம்போல் உறங்குவதும் வாழ்க்கையாமோ?
                வானரம்போல் உறங்குவதும் வாழ்க்கையாமோ? 
        சந்தக் கவிஞர் நா. வேலுச்சாமி துரை, சிவகங்கை
                         

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...