Tuesday, August 22, 2017

தமிழராய் பார்த்து திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது ...(1) => 26.2.17



தமிழராய் பார்த்து திருந்தா விட்டால்       
        தமிழை வளர்க்க முடியாது.
நிமிர்ந்தால் மலைதான் குனிந்தால் குளம்தான்
        உனக்கொரு வாய்ப்பு எண்ணிப்பார்.
உமிதனை நீக்கிய அரிசியை உண்டாய்
        தமிழ்மொழி வளர்ந்திட என்செய்தாய்?
அமிழ்ந்திடும் இனிநம் தமிழெனும் கப்பல்
        எழுவாய் தவறின் பயனிலை.

தமிழுக்கு அமுதென்று பேரென்றாய் அன்னை  
        தமிழேஉன் உயிருக்கும் மேலென்றாய்.
அமிழ்தத்தை மிஞ்சுமொரு மொழியென்றாய் மெல்ல
        அண்டைமொழி சொல்கலந்து சொதப்பிட்டாய்.
தமிழன்னை உனைக்காக்கும் தேவியென்றாய் ஆனால்
        அதையுமொரு நாளோடு மறக்கின்றாய்.
உமிழ்நீரில் புரளுகின்ற நாவினையும் நஞ்சாக்கி
        தற்காப்பு மொழிபகரத் துணிகின்றாய். 

தெருமுனை பேச்சில்நீ பிறமொழி குப்பைகொட்டி
        உன்தமிழை நாஞ்சாக்க ஏன்முனைந்தாய்?
அருமைமிகு தமிழ்சொல் ஆயிரம் இருந்தாலும்
        அயல்மொழி சொல்லெதற்கு செப்பிடுவாய்.
கருமேகம் உன்செயலால் வெட்கித் தலைகுனிந்து
        வேறிடம் சென்றதை அறிவாயா?
இருவேடம் நீதவிர்த்து இக்கணமே மாறிடுவாய்
        திருந்தநீ முயன்றாலே தமிழ்வாழும்.

குறிப்பு: 26.2.17~எழுச்சிக் கவியரங்கம் (மாமதுரை கவிஞர் பேரவை கவியரங்கில் எட்த்தியம்பல்)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...