நயத்தக்க நாகரிகம் நாடுபவர் யாரெனவே
நாலிருவர் மத்தியிலே நான்துணிந்து சொல்வேன்
தயக்கமதைத் தள்ளிவைத்து தாள்பணிந்து
நன்குணர்ந்து
தக்கதொரு சொல்விளக்கம் தந்தெதையும் வெல்வேன்
மயக்கத்தி லேதுவண்டு மண்தரைமீ தேபுரண்டு
மாற்றுமொழி சொல்பகரும் மாந்தரையும் பார்ப்பேன்
வியப்பேதும் காட்டிடவோ வீண்மொழியும்
கூட்டிடவோ
விளங்குமொரு சொல்பகர்ந்து வித்தைவழி ஈர்ப்பேன்
நயமென்னும்
சொல்லதனை நட்புயெனச் செப்புவதில்
நம்பிவரும் மாந்தருடன் நட்புமழை
கூடும்
சுயமென்னும்
சிந்தனையில் சுத்தநெறி நட்புறவும்
சூசகமாய் தன்வழியில் சுற்றிவர நாடும்
தயவேதும்
பாராமல் தான்வெறுக்கும் நஞ்சினையும்
தட்டிடுமோர் எண்ணமின்றி தான்விரும்பி
ஏற்பார்
உயர்வான
இக்கருத்தை ஊரறிய ஈரடியில்
உள்ளபடி
வள்ளுவர்சொல் உண்மையெனப் பார்ப்பார்.
பிறர்நோக
புண்படாமல் பிஞ்சுமனம் வாடிடாமல்
பக்குவமாய் சொல்பகரும் பண்பெனவும்
சொல்வார்
அறமென்னும்
நல்வழியில் அன்புமொழி தான்பகர்ந்து
அங்குசமாய் நின்றுபிறர் அன்பினையும்
வெல்வார்
புறமேதான்
நேர்மையென்றும் பக்திநீதி நுட்பமென்றும்
பொங்கிவரும் கோபமதை போக்குவதும்
என்பார்
திறந்தாங்கே
பொன்மனதால் தீயவழி செல்பவரை
திக்கறியும் சொல்பகர்ந்து தேர்ந்தவழி
காண்பார்&&&
குறிப்பு: 12.6.2017 அன்று நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளைக்கு அனுப்பபட்ட போட்டிக் கவிதை
No comments:
Post a Comment