Monday, August 21, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள்......(2) => (29.1.17)



      மண்ணில் வாழும் உயிர்களுக்கு இரு
          கண்கள் கொடுத்தான் பேரிறைவன்.
      கண்கள் இரண்டு ஏனென்றேன் அவன்
          வள்ளுவனிடம் போய் கேளென்றான்.
      வின்னவர் ஆன வள்ளுவன் என்னை
          அதிகாரம் நாற்பதைப் பாரென்றான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரு
          கருத்தும் உனக்கே தானென்றான்.

      எண்கள் என்றால் வெறும் எண்ணல்ல
          கணிதக் குறிகளும் உண்டென்றான்.
      பின்னிப் பிணைந்து எண்ணும் பலவும்
          கால்அரை முக்கால் ஆயிற்று.
      எண்ணிய அளவில் படியுடன் மரக்கால்
          உழக்கில் பாதி மாகாணியே.
      கன்னம் இரண்டில் அறைந்தாற் போலிவை
          தமிழில் உண்டென தானுரைத்தான்.

     எழுத்தென்றால் வெறும் எழுத்தில்லை தமிழில்
          இலக்கணம் இலக்கியம் தானென்பேன்.
     பழுத்தநற் புலவன் வள்ளுவன் இதையும்
          பட்டும் படாமல் சொன்னானே.
     எழுத்தறி வித்தவன் இறைவன் ஆவான்  
          எள்ளி நகைத்தல் தவறாகும்.
     மழுப்பல் வேண்டாம் நாமினி வலுவாய்
          வள்ளுவன் சொல்லை எற்போமே.


குறிப்பு: 29.1.17 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் கவியரங்கில் எடுத்தியம்பியது. 

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...