தமிழெழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால்
விடியாதா? - இத்தலைப்பு
அமிழ்தமாய்ப்
பட்டாலும் கன்னத்தில் அறைந்தாற்போல்
இருக்கக் கண்டேன்.
எதைச்
சொல்லி எடுத்துரைப்பேன் என்வாதம்
எடுபடுமா என்றெண்ணி – சற்று
பதைத்து
விட்டாலும் சிந்தனை தெளிவுகண்டு
சிறுகவிதை தொடுத்தேன் இங்கு.
துணையின்றி
செயல்பட்டு பிறமொழியை ஓரம்கட்டி - எழுத்தால்
தனித்தன்மை
கொண்டது தமிழென அறிவாய்
தோழா.
அகரவரிசை
தாண்டி லகரழகர மெல்லாம்
வேறெந்த மொழியிலுண்டு? - இன்னும்
சிகரமாய்
தண்ணீர், வெந்நீர், பன்னீரென
ஓரெழுத்து வித்தை தமிழில்தான்
உண்டு.
டண்ணகரத்தில்
தண்ணீர் தன்னகரத்தில் வெந்நீர்
றன்னரத்தில் பன்னீர் கண்டோம். .
தேனீர்
என்று சொன்னால் தேள்வந்து
கொட்டிடுமா? – இதைமறந்து
நானிதோ
துயிலெழுந்தேன் கொண்டுவா டீயை
என்பதில் எதைக் கண்டீர்?
கடைக்குச்
செல்கிறேன் என்று சொன்னால்
கடைவாசல் திறக்காதா? - மெல்லச்சிறு
நடையால்
‘ஷாப்பிங்’ செல்கிறேன்
என்றுரைத்து ஏற்றமென்ன
கண்டீர்?
வேட்டியை
வேஷ்டி என்று
சொல்வது ஏனோ?
– அது என்விருப்பம்
என்றால்
ஆட்டுக்
குட்டியை ஆஷ்டு
குட்டியெனச் சொல்வதும்
தகுமா? எடுபடுமா?
‘டூட்T’ மறந்து
‘லூட்T'
அடித்தான் என்றெழுதி மகிழ்வது
என்ன மொழியோ?
– போதும்
சேட்டைகள்
கூட்டி வேட்டையாடி
கொல்ல வேண்டாம்
தமிழ் பிழைக்கட்டும்.
ஆழ்ந்து
சிந்திப்பீர் அலைபாயும் ஐயம்
தெளிவீர் – தமிழதன் எழுத்தால்
வீழ்ந்து
விடவில்லை விழித்தொருநாள் விடியலைக்
காண்போம் திண்ணம் -ஆனால்
தமிழுக்கிணை
தமிழேயென தம்பட்டம் அடித்து
திரைமறைவில்
அமிழ்து
மொழியை அரைகுறை மொழியாக்கும்
அலங்கோல விளையாட்டு
இனியும்
வேண்டாம் எனக்கூறி எளியோன்
விடைபெறுவேன்.
குறிப்பு: இக்கவிதை முதன்முதலில்17.7.2016-ல் மணியம்மை மழலையர் பள்ளியில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த "மாமதுரை கவிஞர் பேரவையில்" படைக்கப்பட்டது.
குறிப்பு: இக்கவிதை முதன்முதலில்17.7.2016-ல் மணியம்மை மழலையர் பள்ளியில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த "மாமதுரை கவிஞர் பேரவையில்" படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment